கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போகமாட்டீங்குதா? இதோ அதைப் போக்கும் வழிகள்.!
சிலரது முகத்தைப் பார்த்தால், கண்களைச் சுற்றி கருமையான வளையம்
அசிங்கமாக தெரியும். இப்படியான கருவளையம் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனை அல்ல. ஆனால் கண்களைச் சுற்றி கருமையான வளையங்கள் இருப்பது மற்றும் கண்கள் வீங்கி இருப்பது ஒருவரை சோர்வாகவும், ஆரோக்கியமற்றவராகவும் வெளிக்காட்டும்.
இந்த கருவளைய பிரச்சனையைப் போக்க பலர் நிறைய பணம் செலவழித்து க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கருவளையங்களைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை தவறாமல் தினந்தோறும்
பயன்படுத்தி வந்தால், கருவளையங்களை போக்கலாம்.
தூக்கமின்மை
இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கத்தை சமாளித்து டிவி பார்ப்பது அல்லது அரட்டை அடிப்பது போன்றவை கண்களைச் சுற்றி கருவளையங்களை வரவழைக்கும். ஏனெனில் போதுமான தூக்கமின்மை சருமத்தை வெளிறச் செய்கிறது. இதன் காரணமாக கருமையான திசுக்கள் மற்றும் இரத்த நாளங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
திரை நேரம்
தற்போதைய மார்டன் வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் திரையைப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது மேலும் அதிகரித்துள்ளது. நீண்ட நேரம் திரைப் பார்ப்பது நம் கண்களில் அழுத்தத்த
ை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கண்களைச் சுற்றி கருமையான வளையங்கள் தோன்றும்.
வயது
வயதாகும் போது, சருமம் மெல்லியதாகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கத் தேவையான கொழுப்பும், கொலாஜனும் குறைகிறது. இதனால் கண்களுக்கு கீழே உள்ள நீல-சிவப்பு இரத்த நாளங்கள் வெளிப்பட்டு, அவை கருமையான கோடுகளை கண்களுக்கு கீழே வெளிக்காட்டுகிறது.
மரபணுக்கள்
ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கருவளையங்கள் வந்தால், அதற்கு காரணம் உங்களின் மரபணுக்கள் தான். அதோடு சருமத்தில் மெலனின் அளவு அதிகமாக இருந்தால், அது கருவளையங்களை உண்டாக்கும். மெலனின் என்பது ஒரு நிறமி. இது தான் சருமம், தலைமுடி மற்றும் கண்களுக்கு நிறத்தை அளிக்கின்றன. சருமத்தில் மெலனின் அளவு அதிகமாக இருந்தால், அந்த சருமம் கருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment