homemade-face-pack-for-men-for-clear-and-smooth-skin ஆண்களே! உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

homemade-face-pack-for-men-for-clear-and-smooth-skin ஆண்களே! உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...

Homemade Face Pack For Men For Clear And Smooth Skin

ஆண்களே! உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...


ஃபேஸ் பேக்குகள் மற்றும் சரும பராமரிப்பு போன்றவை எல்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களும் தங்கள் சருமத்தின் இளமைத்தன்மையையும், நிறத்தையும் பராமரிக்க முகம் மற்றும் சருமத்தை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வறட்சியான சருமம், எண்ணெய் பசைமிக்க சருமம் மற்றும் சென்சிடிவ் சருமத்தைக் கொண்ட ஆண்கள் சற்று கூடுதல் கவனிப்பு கொடுக்க வேண்டும். பெண்களை விட ஆண்களுக்கு சருமம் சற்று தடிமனாக இருக்கும். எனவே ஆண்கள் தங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்குகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.


கீழே பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிக்கும்v ஆண்கள் தங்கள் அழகை மேம்படுத்த உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி உங்கள் சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.


இந்த ஃபேஸ் பேக் வெயிலால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்க உதவும். ஆண்கள் வெளியே வெயிலில் அதிகம் சுற்றுவதுடன், சன்ஸ்க்ரீனை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள். ஆகவே இவர்களது சருமம் எளிதில் கருமையாகிவிடும். இப்படி கருமையான சருமத்தை மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் வெள்ளையாக்கும். இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு ஒரு பௌலில் ஒரு டீபூன் தயிர் மற்றும் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கருமையாக உள்ள கை மற்றும் பிற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.


மில்க் க்ரீம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
நிறைய ஆண்கள் வறட்சியான சருமத்தை கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான சருமத்தைக் கொண்டவர்கள் சருமத்தில் வெடிப்பு பிரச்சனைகளை சந்திப்பார்க்ள. இதைத் தவிர்க்க ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம் ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பௌலில் சிறிது மில்க் க்ரீம் மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

வேப்பிலை ஃபேஸ் பேக்
முகப்பரு மற்றும் பிம்பிள் அதிகம் கொண்டவர்களுக்கு வேப்பிலை ஃபேஸ் பேக் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்ணபுகள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை போக்குவதோடு, பிம்பிளை வேகமாக போக்கும். அதற்கு ஒரு டீஸ்பூன் வேப்பிலை பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை போட்டு வந்தால், ஆண்களின் முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும்.

No comments:

Post a Comment