beauty-tips-to-remove-acne-and-give-a-radiant-look- முகப்பருக்களை நீக்கி பொலிவான தோற்றத்தை தரும் அழகு குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 19 August 2021

beauty-tips-to-remove-acne-and-give-a-radiant-look- முகப்பருக்களை நீக்கி பொலிவான தோற்றத்தை தரும் அழகு குறிப்புகள் !!

Acne problem

முகப்பருக்களை நீக்கி பொலிவான தோற்றத்தை தரும் அழகு குறிப்புகள் !!


கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.


கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலரவைத்து கழுவவேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
 
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
 
எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
 
வெங்காயம் மற்றும் பூண்டை சரிசமமாக எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் இருக்கும் கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகள் மறையும்.

No comments:

Post a Comment