walnut-dissolves-excess-fat-in-the-body-உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் வால்நட் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 19 August 2021

walnut-dissolves-excess-fat-in-the-body-உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் வால்நட் !!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் வால்நட் !!


வால்நட் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதிலுள்ளது. வால்நட் பருப்பு ருசியானது, அதிக சத்து நிறைந்தது. 

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் வால்நட் பருப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.வால்நட்டில் புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமுள்ளது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இந்த பருப்பில் அடங்கியுள்ளது.
 
வால்நட் பருப்பில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க கூடியது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
 
வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு வேலை செய்யும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
 
வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது.
 
நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. வால்நட்ஸ் பருப்புகளை தொடர்ந்து சாப்பிடும்போது அந்த கற்களை கரைத்து சிறப்பாக செயல்படுகிறது.

No comments:

Post a Comment