benefits-of-eating-a-red-banana-every-day தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

benefits-of-eating-a-red-banana-every-day தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !!

Red banana

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !!


செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.


செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. 
 
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
 
சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும். செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.
 
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.
 
தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு  கட்டுப்படும்.
 
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
 
தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
 
எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு  கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.


No comments:

Post a Comment