நிலவேம்பு மூலிகையின் மருத்துவ குணங்கள் என்ன...?
நிலவேம்பு மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கசப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும்.
இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் பூக்கள் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும். கசப்புச் சுவையின் இராசா என இந்த நிலவேம்பு அழைக்கப்படுகிறது.
நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும். நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே
டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம்.
நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் அதிகமுள்ளன. மேலும் கல்லீரலில் உணவிலிருந்து பெறப்படும் ட்ரைகிளிசரைட் கொழுப்புச் சத்துக்கள் நிரந்தரமாக படிந்துவிடாமல் வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, அதன் செயல்பாட்டை சீராக்குகிறது.
நிலவேம்பு புற்று நோயைக் கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நீண்ட நாட்களாக ஜுரம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு ஏதேனும் உடல்நல
பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்களுக்கு பசி உணர்வு வெகுவாக குறைந்து விடுகிறது.
நிலவேம்பு இலைகளையோ அல்லது நிலவேம்பு பொடியையோ சிறிதளவு நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 3 நாளுக்கு காலை மாலை தொடர்ந்து அருந்துவதால் வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கின்ற தீங்கு விளைவிக்கும் புழுக்கள் அழிந்து, மலத்தின் வழியே உடலை விட்டு வெளியேறும்.
ஜலதோஷத்தால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு கடுமையான தலைவலியும், தும்மல் மற்றும் இருமல் சிலருக்கு ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளைப் போக்குவதில் நிலவேம்பு சிறப்பாக செயல்படுகிறது.
நிலவேம்பு கஷாயத்தை இளம்சூடான பதத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில்
பருகி வருவதால் எப்படிப்பட்ட கடுமையான தலைவலியும் நீங்கும். ஜலதோஷத்தால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்களுக்கு அந்த நீர் இறங்கி தலைபாரம் மற்றும் தலைவலி ஆகியவை நீங்கும்.
No comments:
Post a Comment