blackened-lips-the-remedies- கருமையான உதடை சமாளிக்க சில வழிகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 31 August 2021

blackened-lips-the-remedies- கருமையான உதடை சமாளிக்க சில வழிகள்

Femina

கருமையான உதடை சமாளிக்க சில வழிகள்

முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். உங்களது உதட்டுக்கு உடலில் உள்ள மண்ணீரலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மண்ணீரல்தான் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது. மண்ணீரல் பலவீனமாக இருந்தால் உதடு கருப்பாக இருக்கலாம். உதட்டால் தண்ணீரை வாய் வைத்துக் குடிப்பதுதான் சரி என்றும் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது. தண்ணீரைத் தூக்கி குடிக்கத் தேவையில்லை. தேவையான தண்ணீர் உடலுக்கு போதும் என்று உணர்த்துவது உதடுதான். எனவே, வாய் வைத்து குடிக்கும் பழக்கம் நல்லது. உதடு தண்ணீரால் நனைந்து, உடலுக்கு தண்ணீர் போதும் என்ற சமிக்ஞையை ஏற்படுத்த தண்ணீரை வாய் வைத்துக் குடியுங்கள் எனப் பல வல்லுநர்களும் சொல்லி வருகிறார்கள்.அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள். அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.

உதடு கருப்பாக இருந்தால் என்ன அர்த்தம்?
மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை பற்பசை அலர்ஜி அலுமினியம், காப்பர், மெர்குரி போன்ற கெமிக்கல்களின் விளைவு புகைப்பழக்கம் சூரிய கதிர்களின் தாக்கம் விட்டமின் குறைபாடு அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது மருந்துகள் ஹார்மோன் பிரச்னை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டும். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

உதட்டில் உள்ள கருமை நீங்க சத்தான உணவுகள்
தினந்தோறும் கடைபிடிக்க வேண்டியவை மாதுளை திராட்சை விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள் 2-3 லிட்டர் தண்ணீர் நீர் மோர் இளநீர் பசுநெய் கலந்த உணவுகள் கீரைகள் பழச்சாறுகள்

கருமை நீக்கும் இயற்கை ஸ்கரப்
வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்கள் இருக்க வேண்டும். அதுபோல. இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேய்காய் எண்ணெய் தடவலாம். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து விடவும். இதைக் கொண்டு ஸ்கரப் செய்யலாம்.

No comments:

Post a Comment