home-remedies/live-a-self-confidence-life வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 30 வழி முறைகள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday 31 August 2021

home-remedies/live-a-self-confidence-life வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 30 வழி முறைகள்!

Femina

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 30 வழி முறைகள்!



மனதையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும்.

01. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

02. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

03. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

04. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

05. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

06. நிறைய புத்தகங்கள் படியுங்கள்.

07. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

08. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

09. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அது உங்கள் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

15. அடுத்தவரைப் பார்த்துப் பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்குத் தேவையானது உங்களிடம் உள்ளது.

No comments:

Post a Comment