முகத்தில் உள்ள கருமை நீங்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் !!
கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி
கிடைக்கும்.
இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும்
முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொழிவுடன் காணப்படும்.
பாதாம் எண்ணெயிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
பப்பாளி முகத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.பப்பாளி துண்டுகளை நன்கு மசித்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சிடும்.
தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.
பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.
No comments:
Post a Comment