benefits-of-drinking-drumstick-tea-everyday அன்றாடம் முருங்கை டீ குடிப்பதால் உண்டாகும் பலன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 13 August 2021

benefits-of-drinking-drumstick-tea-everyday அன்றாடம் முருங்கை டீ குடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

Drumstick Tea

அன்றாடம் முருங்கை டீ குடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!


முருங்கை காய், கீரை, பூ எல்லாவற்றிலும் மிக அதிக அளவிலான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகளும் இரும்புச்சத்தும் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் முருங்கை  கீரை சாப்பிட யோசிப்போம். கசக்கும் என்று அதை ஒதுக்கி வைத்திவிடுவோம். 

முருங்கை இலையை பொடி செய்து அதை டீயில் கலந்து குடிப்பதால் அதிலுள்ள கசப்புத் தன்மையும் குறையும். சுவையாகவும் இருக்கும். இன்னும் கூடுதல்  நன்மைகளையும் பெற முடியும். உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடியும். முருங்கைக்கீரை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால் இதய நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய நோயாளிகளுக்கும் உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக ஊளைச்சதையாலும் தொங்குகின்ற தொப்பையாலும் தொடைப்பகுதியில் இருக்கும் செல்லுலாய்டு   கொழுப்புத் திசுக்களையும் குறைக்க உதவுகிறது.
 
ஆன்டி ஆக்ஸிடென்டுகள் செறிந்த இந்த டீயில் பாலிபினால்கள் அதிகமாக இருக்கின்றது. முருங்கை டீக்கு எடையை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த டீயை குடிக்கும் போது கொழுப்பு சேமிக்கப்படுவதற்கு பதிலாக ஆற்றல் உற்பத்தி நடக்கிறது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு  சத்தை கொண்டிருப்பதோடு ஊட்டச்சத்துக்கள் செறிந்தது. இதில் கலோரிகளின் அளவும் குறைவு.
 
முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ்,  சுண்ணாம்புச் சத்து ஆகியவை கொட்டிக் கிடக்கிறது.
 
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும் , பலமும், தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும்.  தோல் வியாதிகள் நீங்கும்

No comments:

Post a Comment