why-should-arai-keerai-be-included-in-the-diet-often அரைக்கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

why-should-arai-keerai-be-included-in-the-diet-often அரைக்கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்...?

Arai Keerai

அரைக்கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்...?


அரை கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்,  கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது.

அரைக்கீரையில் உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும். இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர  தலைமுடி நன்கு வளரும் . தலைச்சூடு குறையும். இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.
 
இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். 
 
அரைக் கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும். இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும். இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்
 
அரை கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. ஏற்கனவே புற்றுநோய் பாதிப்புகள்  உள்ளவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment