வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது கேன்சரை உண்டாக்குமாம்...
மக்களில் பலர் வாய் வழி சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாய் எப்படி இருந்தாலும் அதை குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. அதிகமான மக்கள் நாளில் ஒரு வேளை மட்டுமே பல் துலக்குகின்றனர். இங்கே பலருக்கு தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளை பல் துலக்க வேண்டும் என்னும் விஷயமே தெரிவதில்லை. ஆனால் வாய் சுகாதாரத்தை கண்டுக்கொள்ளாமல் விடுவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
உள் கன்னம், பற்கள் மற்றும் ஈறுகள் போன்றவை வாயில் மோசமான நிலையில் இருந்தால் அவர்கள் வாய் மற்றும் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்தியாவின் மருத்துவர் ஒருவரின் கருத்துப்படி
ஆண்களில் 11.28 சதவீதத்தினருக்கு வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே போல பெண்களில் 4.3 சதவீதத்தினருக்கு வாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாயில் ஏற்படும் புற்றுநோயானது நமது உடலை வெகுவாக பாதிக்கிறது.
புகையிலை மெல்லுதல், மது அருந்துதல் போன்ற மோசமான வாய் சுகாதாரமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதனால் வாயில் ஈறு சம்பந்தமான பிரச்சனைகள், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வாயில் சுத்தம் இல்லாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. புகையிலை மெல்லுதல், வெற்றிலை போடுதல், நோயெதிர்ப்பு குறைபாடுகள், சமூக பொருளாதார நிலை, ஆல்கஹால் ஆகியவை வாய் சுத்தத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளாக உள்ளன. இதனால் சாதரண மனிதர்களுக்கே வாய் சுகாதாரம் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
No comments:
Post a Comment