verything-you-should-know-about-hepatitis- உலகளவில் ஆண்டுதோறும் 10கோடிக்கும் அதிகமான மக்கள் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ நோயால் பாதிப்பு - WHO! - நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 4 August 2021

verything-you-should-know-about-hepatitis- உலகளவில் ஆண்டுதோறும் 10கோடிக்கும் அதிகமான மக்கள் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ நோயால் பாதிப்பு - WHO! - நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

உலகளவில் ஆண்டுதோறும் 10கோடிக்கும் அதிகமான மக்கள் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ நோயால் பாதிப்பு - WHO! - நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!


ஹெப்பாடிட்டீஸ் ஏ' தாக்கத்தை புரிந்து கொள்தல்

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' - வைரஸ் மூலம் பரவக்கூடிய கல்லீரல் தொற்று1. அதன் தீவிரம் லேசாக தொடங்க பின்னர் தீவிரமாகும். இது சில வாரங்களில் இருந்து மாதங்கள் வரை நீடிக்கும்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி மக்கள் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' தொற்றால் பாதிக்க படுகிறார்கள் என தெரிவித்துள்ளது2. இந்த கல்லீரல் தொற்று குழந்தைகள் மத்தியில் லேசகவும், ஆனால் சில கேஸுகளில் கொஞ்சம் தீவிரமாக இருக்கும்3. இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில், தொற்றின் தீவிர அறிகுறிகள் தெரியும், மஞ்சள் காமாலை நோய் 70% கேஸுகளுக்கு அதில் ஒன்றாக வரும்.4

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' தொற்று தொடர் நோயை ஏற்படுத்தாது, ஆனால் தீவிரமாக இருக்கலாம்.5 அதை கவனிக்காவிட்டால், சில கேஸுகளில், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் மிக அரிதாக இறப்பு போன்ற தீவிரமான சிக்கல்கள் ஏற்படலாம். உலகம் முழுவதும் இந்த நோய் தொற்று வரலாம், குறிப்பாக சுகாதாரம் குறைவாக உள்ள இடங்களில்6. அதனால் தான் குழந்தைகள், அவர்கள் வாழ்வில் முன்பு இந்த வைரஸால் பாதிக்கப்படாதவர்கள், குறிப்பாக சுத்தமான பகுதிகளில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் முந்தைய குழந்தை பருவத்தில் வந்து தீவிர தொற்றை வளரிளம் பருவம் மற்றும் இளமை பருவத்தில் பாதிக்கும்.7

எவ்வாறு பரவுகிறது?

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவின் மூலம் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' வைரஸ் தொற்று பரவும். இது முக்கியமாக மனிதனிடம் இருந்து மனிதனுக்கு ஆசன குழாய் - வாய் வழியாக அல்லது யாரேனும் அசுத்தமான தண்ணீர், பால் அல்லது சரியாக தயாரிக்கப்படாத, சேமிக்கப்படாத மற்றும் சகாதாரமற்ற உணவு மூலமாக வரலாம்.

தொற்று கொண்ட குழந்தையின் டையப்பரை தொடுதல் அலல்து அதற்கு பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவாதது போன்ற காரணங்களுக்காகவும் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' தொற்று பரவலாம். உங்கள் உணவை அல்லது தண்ணீரை உணவகங்களில் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது கதவு கைப்பிடியை தொடுதல் அல்லது தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து அதிக அளவு தெரியாத துகள்கள் இருந்தால் நீங்கள் அபாய கட்டத்தில் உள்ளீர்கள் என புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

நோய் வாய்ப்பட்ட அனைவர்க்கும் அறிகுறிகள் வராது. அறிகுறிகள் (வந்தால்) தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்கள் கழிந்து வரும். அவை:

● காய்ச்சல்

● வாந்தி

● க்ரே - வண்ண கழிவு

● சோம்பல்

● அடிவயிறு வலி

● மூட்டு வலி

● பசியின்மை

● குமட்டல்

● மஞ்சள்காமாலை

நினைவில் இருக்கட்டும், தொற்று ஏற்பட்ட அனைவர்க்கும் இந்த அனைத்து அறிகுறிகளும் வராது. சில கேஸுகளில், அறிகுறிகள் 6 மாதம் வரை நீடிக்கும்8 .

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' - பாதுகாக்க முடியுமா?

ஆம், 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' தடுக்கப்படலாம். உங்களை பாதுகாத்துக் கொள்ள எளிமையான வழிகள்:

1. சுத்தமான தண்ணீர் மற்றும் நன்கு சமைத்த உணவை உண்ணுதல்.

பச்சை கறி வகைகள் மற்றும் ஓடு மீன்களை தவிர்க்கவும் மேலும் பழங்கள் மற்றும் காய் கறிகளை சுத்தமான நீரில் கழுவவும்.

2. உங்கள் கைகளை கழுவ மறவாதீர்கள்

உங்கள் கழிவறையை பயன்படுத்திய பிறகு, குழந்தையின் நாப்பி-யை மாற்றிய பிறகு மற்றும் உணவு தயாரிக்கும் முன்பு சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கழுவவும்.

3. உங்கள் வீடுகளை சுற்றி சுத்தமான சுற்றுப்புறத்தை உறுதி செய்யுங்கள்

4. தடுப்பூசி உங்கள் குழந்தையை 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' வில் இருந்து பாதுகாக்கும்.

'ஹெப்பாடிட்டீஸ் ஏ'-விற்கான சிகிச்சை?

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' விற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை ஆனால் அந்த நோயில் இருந்து முன் பாதுகாப்புகள் எடுத்துக் கொண்டு பாதுகாப்பது மிக சிறந்தது. 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' -வில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி சிறந்த வழி.

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

'ஹெப்பாடிட்டீஸ் ஏ' விற்கு எதிரான தடுப்பூசி ஒரு வருடம் மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு போடலாம். அதனால் தான், WHO மற்றும் இந்திய குழந்தைகள் மைய, உலக மற்றும் தேசிய நல அதிகாரிகள் அனைத்து குழந்தைகளுக்கும் 'ஹெப்பாடிட்டீஸ் ஏ' தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றனர்3,8. மேலும் தகவல்களுக்கு உங்கள் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

No comments:

Post a Comment