தினமும் 5 பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்ன? ஆய்வு சொல்லும் ஆரோக்கிய நன்மைகள்!
தினசரி ஆரோக்கியத்தில் பாதாம் சேர்ப்பது உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு உதவும். பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஊறவைத்த பாதாம் கணிசமான ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது தெரியுமா. அப்படி ஊறவைத்து எடுத்துகொள்ளும் பாதாமில் இருக்கும் நன்மைகளாக ஆய்வு சொல்வது என்ன தொடர்ந்து படியுங்கள்.
ஊறவைத்த பாதாம் என்பது ஒரு இரவு முழுக்க பாதாமை நீரில் மூழ்க வைத்து சாப்பிடுவது. பாதாமை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது.
ஏனெனில் பாதாமின் தோலில் உள்ள டானின்கள் மற்றும் அமிலங்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முறை உதவுகிறது. இவை உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை தடுக்கிறது. முக்கியமாக பாதாமை நீரில் ஊறவைக்கும் போது உடலின் அதிகப்படியான உயிர்ச்சத்து கிடைக்கும்.
பாதாம் ஆரோக்கியமானது என்றாலும் இந்த கொட்டைகளை ஊறவைப்பதன்
மூலம் அவற்றில் இருந்து அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்ச முடியும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்த உதவும். நொதி செயல்பாட்டை தூண்டும். அதோடு ஊறவைத்த பாதாமின் சுவையும் கூடுதலாக இருக்கும். இது பல்வேறு உணவு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஊறவைத்த பாதாமில் இருக்கும் ஊட்டச்சத்துபாதாம் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் வைட்டமின் பி மற்றும் லிபேஸ் போன்ற என்சைம்கள் உள்ளன. யு.எஸ்.டி.ஏ தேசிய ஊட்டச்சத்து தரவுத்தளத்தின் படி வெண்மையாக்கப்பட்ட பாதாம் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், மோனொசாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டர் கொழுப்புகள் மற்றும் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட நல்ல ஆதாரமாகும்.
No comments:
Post a Comment