cracked-heels-and-the-cure- பாதவெடிப்பு பிரச்சனை - ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 30 August 2021

cracked-heels-and-the-cure- பாதவெடிப்பு பிரச்சனை - ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள்

Femina

பாதவெடிப்பு பிரச்சனை - ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள்

பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.

பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றை கீழ்வருமாறு காணலாம்:

ஈரப்பதம் குறைவு
வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைபாடு
நீண்ட நேரம் நிற்பது
வயது கூடுதல்
சொறிநோய், தைராய்டு, நீரிழிவு
சரியான காலணி அணியாதது
மரபியல்
உடற்பருமன்

No comments:

Post a Comment