pneumonia-fever-and-how-to-care-at-home நிமோனியா காய்ச்சல் குணமடைய வீட்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 30 August 2021

pneumonia-fever-and-how-to-care-at-home நிமோனியா காய்ச்சல் குணமடைய வீட்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

Femina

நிமோனியா காய்ச்சல் குணமடைய வீட்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்


நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் நோயாகும். நிமோனியா உள்ளவர்களுக்கு நுரையீரலில் இருக்கும் சிறிய காற்றுப் பைகளில் சீழ் பிடிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். எல்லா வயதினரையும் பாதிக்கும் இந்நோய், 2 வயதிற்கு குறைவானோர் மற்றும் 60 வயதிற்கு அதிகமானோரை பாதிக்க அதிக வாய்ப்புண்டு.

இருமல், முச்சுத்திணறல், காய்ச்சல், மூச்சு வாங்குதல், அசதி, வாந்தி, சுவாசிக்கும் பொழுதும் இருமும் பொழுதும் நெஞ்சு வலி, பசியின்மை, மலச்சிக்கல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும்.

நிமோனியா ஏற்பட பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஃபங்கஸ் கிருமிகள் காரணமாக இருக்கலாம். மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், பொது இடங்கள் ஆகிய இடங்களில் நிமோனியா நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. சுவாசக்கருவிகள் பயன்படுத்துதல், உணவு மற்றும் எச்சிலை சுவாசிப்பதால் கூட நிமோனியா தாக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment