does-kothavarangai-help-reduce-the-risk-of-many-diseases பல நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறதா கொத்தவரங்காய்? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

does-kothavarangai-help-reduce-the-risk-of-many-diseases பல நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறதா கொத்தவரங்காய்?

பல நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறதா கொத்தவரங்காய்?


கொத்தவரங்காயில் 100 கிராமுக்கு 1.4 கிராம் கொழுப்பு மட்டுமே இருப்பதால், அவை இதயத்திற்கு நல்லது. மேலும், கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

கொத்தவரங்காயை உண்பது மோசமான கொழுப்பு (LDL) அளவைக் குறைத்து உடலில் நல்ல கொழுப்பு (HDL) அளவை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி  கூறுகிறது.


நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். கொத்தவரங்காயின் ஒரு முக்கிய அங்கம் அவற்றிலுள்ள ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது இரத்த சர்க்கரை  அளவைக் கட்டுப்படுத்த உதவும் 
 
கொத்தவரங்காய் உண்பது உங்கள் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. எனவே, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
 
கொத்தவரங்காயில் நார்ச்சத்து மற்றும் நீர் நிறைந்திருப்பதால், அவை உங்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும்  மேம்படுத்துகிறது.
 
கொத்தவரங்காயின் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அவற்றின் பித்தப்பை கற்களை கரைக்கும் திறன் ஆகும்.
 
நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பித்தப்பைக் கற்கள் உள்ளிட்ட பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க கொத்தவரங்காய் உதவும்.

No comments:

Post a Comment