what-are-the-medicinal-benefits-of-black-cardamom கருப்பு ஏலக்காய் மருத்துவ நன்மைகள் என்ன...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

what-are-the-medicinal-benefits-of-black-cardamom கருப்பு ஏலக்காய் மருத்துவ நன்மைகள் என்ன...?

Black Cardamom

கருப்பு ஏலக்காய் மருத்துவ நன்மைகள் என்ன...?


ஏலக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. அவை 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை  பொருளாகும். 

ஏலக்காயில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின்கள் B1, B2, B3, A போன்றவை  உள்ளது.

கருப்பு ஏலக்காயை புலாவ் மற்றும் பிரியாணிகளில் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே பிரியாணியில் கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை,  நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு நிவாணம் அளிக்கும்.
 
ஏலக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்கி வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது. ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
 
அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். ஏலக்காய் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
 
ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் இரத்தம் இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது. உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது.

No comments:

Post a Comment