does-pirandai-help-broken-bones-join-quickly முறிந்த எலும்புகளை விரைவில் சேர்வதற்கு உதவுமா பிரண்டை..? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 21 August 2021

does-pirandai-help-broken-bones-join-quickly முறிந்த எலும்புகளை விரைவில் சேர்வதற்கு உதவுமா பிரண்டை..?

முறிந்த எலும்புகளை விரைவில் சேர்வதற்கு உதவுமா பிரண்டை..?


பிரண்டை காரச்சத்து அதிகம் கொண்டது. பிரண்டையை சாப்பிடும்போது அதிலுள்ள காரச்சத்து ரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை  அதிகப்படுத்துகிறது.
 

பிரண்டை மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம் வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது. பாக்டீரியா, வைரஸ்  போன்ர கிருமிகலால் ஏற்படும் நோய்களையும், ஜீரம் போன்றவையும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.
 
காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். 
 
மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து  வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.
 
முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.  பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊறவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
 
வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது ஒருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண  கோளாறுகள் போன்றவை நீங்கும். குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.

No comments:

Post a Comment