white-mustard-with-various-medicinal-properties- பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வெண்கடுகு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 21 August 2021

white-mustard-with-various-medicinal-properties- பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வெண்கடுகு !!

white mustard

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வெண்கடுகு !!


கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 


வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.
 
வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி  செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். 
 
கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.
 
வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி,  வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும். 


No comments:

Post a Comment