what-are-the-benefits-of-eating-chapati-kalli-fruit-regularly சப்பாத்திக்கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட கிடைக்கும் பயன்கள் என்ன? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 21 August 2021

what-are-the-benefits-of-eating-chapati-kalli-fruit-regularly சப்பாத்திக்கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட கிடைக்கும் பயன்கள் என்ன?

Chapati Kalli Fruit

சப்பாத்திக்கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட கிடைக்கும் பயன்கள் என்ன?


இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்தி கள்ளிப்பழம். இது நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.


இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியாக தண்ணீரே இல்லாத இடத்தில் கூட காட்டுச் செடிகளைப் போன்று வேலி ஓரங்களில் வளர்ந்து கிடக்கும். 
 
சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும்  மாரடைப்பை தவிர்க்க முடியும்.
 
இன்றைய மாறிவிட்ட சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை  பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன. 
 
இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக்  காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
 
ஆண்மைக் குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை இந்த பழம் தீர்க்கிறது. கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம்.

குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில்  மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம்.
 
இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும், விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருள்களும்  சாப்பிடக் கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment