karupatti-is-full-of-nutrients-high-in-iron- இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் கருப்பட்டி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 21 August 2021

karupatti-is-full-of-nutrients-high-in-iron- இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் கருப்பட்டி !!

Karupatti

இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் கருப்பட்டி !!


கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி  புரியும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
 
இரத்த சோகை: கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு  குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த  சோகை ஏற்படாது.
 
கருப்பட்டியில் கெமிக்கல் ஏதும் கலக்கப்படாமல் தயாரிப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் கருப்பட்டி சேர்த்து சமைக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டமும் மிகவும் சுவையாக இருக்கும்.
 
நமது உடலை போர்வை போல் மூடி இருக்கும் தோல் உடலை வெளிப்புற வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. வயதாகும்போது  பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது. 
 
கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment