get-amazing-benefits-of-eating-food-containing-pepper மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் போக்குக்கு நல்லது. பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம். மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்தஉறைதலையும் கட்டுப்படுத்தும். - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

get-amazing-benefits-of-eating-food-containing-pepper மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் போக்குக்கு நல்லது. பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம். மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்தஉறைதலையும் கட்டுப்படுத்தும்.

pepper

மிளகு கலந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால்  வயிற்றுப் போக்குக்கு நல்லது. 

பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம். மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்தஉறைதலையும் கட்டுப்படுத்தும்.

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் முன்னோர்கள்.
 
மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.
 
ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும், ஆரம்பக்கட்டப் பிரச்சினையை எதிர்த்துச் செயல்படும்.
 
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம்புல்லையும், பத்து மிளகையும் இடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்திவந்தால், விஷக்கடிகள் முறிந்துவிடும்.
 
மிளகை ஒரு ஸ்பூன் எடுத்துப் பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்துச் சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.
 
மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட்டால் தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடிபோல் மூக்கில் உறிஞ்சினாலும் தலைவலி தீரும்.

No comments:

Post a Comment