ghee-helps-to-improve-the-health-of-the-body உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த உதவும் நெய் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

ghee-helps-to-improve-the-health-of-the-body உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த உதவும் நெய் !!

உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த உதவும் நெய் !!


நெய்யில் இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது.

நெய்யில் சங்கிலி தொடர்பான கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் நெய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க உதவுகிறது.
 
மனிதர்களின் வயிற்றின் குடற்சுவற்றில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள், உணவில் இருக்கும் நார்ச்சத்தை பியூடைரிக் அமிலமாக மாற்றிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகளுக்கு வலுசேர்க்க பியூடைரிக் அமிலம் நிறைந்த நெய்யை அடிக்கடி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
 
நெய்யை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இந்த கில்லர் டி செல்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு வலுவடைந்து தொற்று நோய்கள், நுண்ணுயிர் தாக்குதல்கள் ஏற்படாமல் காக்கிறது.
 
நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது. எனவே வயிறு மற்றும் குடல்களை வலுப்பெறச் செய்து உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
 
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
 
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

No comments:

Post a Comment