ஜீரணசக்தியை அதிகரிக்க செய்யும் வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் !!
வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும் தரும்.
வெட்டிவேர் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல் சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும்.
மண்பானை தண்ணீரில் வெட்டிவேரை போட்டு குடித்தால் தாகத்தை
தணித்து உற்சாகத்தை அளிக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து அதனை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் வெயிலால் ஏற்படும் வியர்வை மற்றும் அரிப்பு நீங்கும்.
கோடை காலங்களில் மண்பானையில் உள்ள நீரில் வெட்டிவேரை போட்டு வைத்துவிட வேண்டும். அந்த தண்ணீரை நாள்தோறும் பருகி வந்தால் தாகம் தணிந்து உடல் சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.
வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றத்தை
நீக்க வெட்டி வேரினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.
காய்ச்சலுக்கு பிறகு ஏற்படும் உடல் சோர்வு நீங்க வெட்டி வேரை நீரில் போட்டு கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். மேலும் இது ஜீரணசக்தியை அதிகரிக்க செய்யும்.
தீக்காயம் விரைவில் குணமாக வெட்டிவேரை அரைத்து அந்த விழுதினை தீக்காயத்தின் மேல் தடவி வந்தால் புண் விரைவில் குணமாகும். மேலும் தழும்புகள் விரைவில் மறந்துவிடும்.
மூட்டு வலி, கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை
கலந்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கொட்டை நீக்கிய கடுக்காய், வெட்டி வேர் இரண்டையும் கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும்.
வெட்டிவேர் பொடி ஒரு ஸ்பூன், கருஞ்சீரகப் பொடி ஒரு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 2 மில்லி கிராம் அளவிலான தண்ணீரை குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
No comments:
Post a Comment