nutrients-in-rajma-and-its-benefits- ராஜ்மாவில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

nutrients-in-rajma-and-its-benefits- ராஜ்மாவில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

Rajma

ராஜ்மாவில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!


ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 

ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. உடலின் எடையை குறைக்க ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது.

நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இதில் அதிகப்படியான புரதச் சத்து நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள கார்போஹைட்ரேட் அளவினை அதிகமாக சேர்க்க விடாமல் தவிர்க்கின்றது. உடல் எடையை குறைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். புற்றுநோய் தாக்கத்தை குறைக்க புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோய் செல்கள் நம் உடம்பில் அதிகமாகாமல் தடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இந்த மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் k அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் புதியதாக செல்கள் உருவாக்குவதில் இருக்கின்ற சிக்கல்களை தடுத்துவிடும். 
 
இதய ஆரோக்கியத்திற்கு ராஜ்மா சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் நம் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதில் இருக்ககும் கரையக்கூடிய நார்ச்சத்தானது பெருங்குடலில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து விடும். இதிலுள்ள பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. 
 
ராஜ்மாவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கின்றது. 
 
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ராஜ்மாவில் இருக்கும் கரையக்கூடிய ஃபைபர் சத்தானது நம் உடலின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. 
 
கர்பிணி பெண்கள் ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் புரதம், இரும்பு, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். இதுதவிர வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஃபோலிக் அமிலம் எனப்படும் சத்தும் இந்த ராஜ்மாவின் மூலம் கிடைக்கிறது

No comments:

Post a Comment