herbal-teas-that-give-health-to-the-body உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 20 August 2021

herbal-teas-that-give-health-to-the-body உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்...!!

Tulsi kudineer

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்...!!


1. துளசி டீ தயாரிப்பு: மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயிர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


துளசி  இலையை சாறு எடுத்து அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் இருந்தாலும் குணமாகும்.
 
தேவையான பொருட்கள்: துளசி இலை - 1/2 கப், தண்ணீர் - 2 கப், டீத்தூள் - 2 டீஸ்பூன், சர்க்கரை - தேவையான , பால் - தேவையான அளவு.
 
செய்முறை: துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும். பின் டீத்தூள், சர்க்கரையை  போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.
 
2. புதினா டீ தயாரிப்பு
 
தேவையான பொருட்கள்: புதினா இலை - 5, தேயிலை - ஒரு டீஸ்பூன், தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், பால் - கால் டம்ளர்
 
செய்முறை: ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும்  பருகலாம்.

No comments:

Post a Comment