தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்...!!
தினந்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.
* கண்பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க
பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.
* எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
* தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை,
கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.
* பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
* பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்களுக்கு இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.
* தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment