hibiscus-flower-that-removes-toxins-mixed-in-the-blood ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகளை போக்கும் செம்பருத்தி பூ !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 13 August 2021

hibiscus-flower-that-removes-toxins-mixed-in-the-blood ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகளை போக்கும் செம்பருத்தி பூ !!

Hibiscus flower

ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகளை போக்கும் செம்பருத்தி பூ !!


பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். 

சிறுநீர் ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும். கோடை காலங்களில் நீர் சுருக்கு ஏற்படுவதாலும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உண்டாகும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும். இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் நீங்கும். புண்கள் கோடை காலங்களிலும், மருத்துவ மனைகளில் நீண்ட காலம் இருக்கும்.
 
பலருக்கும் உடல் சூடு காரணமாக வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ரத்த சுத்தி செம்பருத்தி பூவில் நச்சுக்களை அழிக்கும் வேதி பொருட்கள் அதிகம் உள்ளது. 
 
தினமும் காலையில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி, உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது. பேன் தொல்லை அனைத்து வயதில் இருக்கும் நபர்கள், குறிப்பாக அடர்த்தியான தலைமுடியை கொண்ட நபர்களுக்கு பேன்கள் பிரச்சனை ஒரு தொல்லையாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் தொல்லை நீங்கும். 
 
பெண்கள் பிரச்சனைகள் பெண்களாக பிறந்த அனைவரும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும், அப்பூவை நீரில் வேகவைத்து, வடிகட்டி அருந்துவதாலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும். 
 
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிப்பதோடு, இரத்த சோகை நோய் குறையும்.



No comments:

Post a Comment