உடல் நல குறைபாடுகளை போக்கும் கொத்தவரங்காய் !!
கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால்
கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.
உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.
ரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.
கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். சரும நலம் நமது சருமம் எனப்படும் வெளிப்புற தோல் நமது உடலை பாதுகாப்பதோடு, நமக்கு அழகிய தோற்றத்தையும் தருகிறது.
கொத்தவரங்காய் சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன.
அதோடு முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment