what-are-the-benefits-of-eating-coriander- கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

what-are-the-benefits-of-eating-coriander- கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன...?

கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன...?

உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு.

நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும்.புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.
 
வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
 
கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது.
 
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச்  சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்.
 
தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.

No comments:

Post a Comment