kudam-puli-cures-heart-related-diseases இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் கொடம் புளி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 13 August 2021

kudam-puli-cures-heart-related-diseases இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் கொடம் புளி !!

Kudam Puli

இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் கொடம் புளி !!

குடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் எனும் ஆசிட் இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை படைத்தது என்பதுடன் உடலில் கொழுப்பை குறைத்த ு மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்தும். 

உடல் மெலிவிற்கான தயாரிக்கப்படும் பல மருந்துகளில் பிரதான மருந்தே குடம் புளி தான். எனவே உடலை இயற்கையான முறையில் மெலிய செய்ய விரும்புபவர்கள் அன்றாட சமையலில் குடம் புளியை பயன்படுத்தி கொள்ளலாம்.

குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுபோக்கை குணப்படுத்த தரப்படுகிறது. குடம்புளியின் பழத்தோலையில் இருந்து சாறு எடுத்து வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக தரலாம். இந்த குடம் புளி மரத்தின் பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.
 
கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
 
கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.

No comments:

Post a Comment