துத்தி மூலிகையை பயன்படுத்தி என்னென்ன உடற்பிணிகளை நீக்கலாம்...?
துத்தி பயன்கள் முக பருக்கள் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள் துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து,
நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும். ஆண்மை குறைபாடு தவறான உணவுப் பழக்கம், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் அதிகம் வெப்பமடைவது போன்ற காரணங்களால் இக்காலங்களில் ஆண்கள் பலருக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது. இப்படிப்பட்ட ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும்.
விந்து உற்பத்தி அடர்த்தியாகும்.
மூல நோய் மூல நோய் கொண்டவர்கள் அனுபவிக்கின்ற துன்பம் மற்றவர்கள் அனுபவிக்கும் போது மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மூல நோய்க்கு சிறந்த மூலிகை மருந்தாக துத்தி இருக்கிறது. துத்தி இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, அப்பொடியைக் காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம், உள் மூலம், மூலப் புண்கள், மூலக் கடுப்பு மற்றும் நமைச்சல் முதலிய மூலம் சம்பந்தமானஅனைத்து பிணிகளும் அகலும்.
சிறுநீர் பிரிய நமது உடலில் இதயத்தை போல முக்கியமான உறுப்புகளாக இரண்டு சிறுநீரகங்களும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சரியான இடைவெளியில் சிறுநீர் நன்றாக கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு சிலர் தண்ணீர் குறைவாக அருந்துவதாலும், அதீத உடல் வெப்பத்தாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் எதிர்காலங்களில் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
No comments:
Post a Comment