lemon-removes-teeth-and-gum-related-defects பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகளை நீக்கும் எலுமிச்சை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday 10 August 2021

lemon-removes-teeth-and-gum-related-defects பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகளை நீக்கும் எலுமிச்சை !!

Lemon

பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகளை நீக்கும் எலுமிச்சை !!


எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் காப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள். இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
 
இரண்டு நாட்களுக்கொரு முறை அல்லது குறைந்த பட்சம் வாரத்திற்கொரு முறை எலுமிச்சம் சாறு அருந்துபவர்களுக்கு கல்லீரலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் தூய்மையாகி உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
 
தினமும் எலுமிச்சம் பழ சாற்றை காலையில் அருந்தி வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரக அறுவை சிகிச்சை நோய் ஏற்படாமல் செய்கிறது.
 
எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலையில் விட்டு தலைமுடியின் வேர்களில் நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது. தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. அதிக அளவில் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

No comments:

Post a Comment