sukku-is-an-easy-solution-to-health-problems ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் சுக்கு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 10 August 2021

sukku-is-an-easy-solution-to-health-problems ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் சுக்கு !!

ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் சுக்கு !!

சுக்குவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பலரும் இதனை சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த சுக்கு பொடியைக் கொண்டு வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய, கரும்பு ஜூஸில் சுக்கு பொடியை சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.தலைவலி வரும் போது, அதில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, சுக்கு பொடியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ வேண்டும். இதேப்போல் தொண்டை வலி வந்தால், தொண்டையில் தடவுங்கள்.
 
இருமலுக்கு சுக்கு பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று பலரும் அறிந்ததே. அதிலும் அதனைக் கொண்டு தினமும் 2-3 முறை டீ போட்டு குடித்தால், தொல்லை தரும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால், அப்போது இஞ்சி டீ செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் மூக்கு ஒழுகல் உடனே நின்றுவிடும்.
 
உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதற்கு 1/2 டீஸ்பூன் சுக்கு பொடியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையைக் குறைத்து, உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்ள உதவும்.
 
சுடுநீரில் ப்ளாக் உப்பு, சுக்கு பொடி மற்றும் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், வயிற்று உப்புசம் நீங்கும். 3-4 துளிகள் எலுமிச்சை ஜூஸில், சுக்கு பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து பேஸ்ட் செய்து, நிழலில் உலர வைக்க வேண்டும். பின் அதனை தினமும் அதிகாலை மற்றும் மாலையில் சிறிது உப்பு சேர்த்து உட்கொண்டு வந்தால், வயிற்று உப்புசம், செரிமானமின்மை போன்றவை நீங்கும்.

No comments:

Post a Comment