let-s-learn-about-the-uses-of-neem-oil வேப்ப எண்ணெய்யின் பயன்பாடுகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 19 August 2021

let-s-learn-about-the-uses-of-neem-oil வேப்ப எண்ணெய்யின் பயன்பாடுகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

வேப்ப எண்ணெய்யின் பயன்பாடுகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!


வேப்ப எண்ணெய் வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெய்யாகும்.


வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு  தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும். அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது.
 
தினமும் வேப்ப எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை ஒழிவதுடன், முடிகொட்டுவது, முடிய வளர்ச்சிக்கும் உதவும். மூக்கடைப்பு ஏற்பட்டால் இரவில் தூங்குவது கஷ்டமாக இருக்கும் வேளைகளில் படுக்கச்செல்லும் முன் மூக்கின் துவாரத்தில் தடவினால் மூக்கடைப்பு சரியாகும்.
 
வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல்  சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.
 
வேப்ப எண்ணெய்யுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால்,  கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.
 
சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

No comments:

Post a Comment