jasmine-flowers-useful-in-natural-medicine இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மல்லிகை பூக்கள்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 19 August 2021

jasmine-flowers-useful-in-natural-medicine இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மல்லிகை பூக்கள்...!!

Jasmine

இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மல்லிகை பூக்கள்...!!

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப்  போக்கும்.

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல்  போன்ற தொந்தரவுகள் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும்.
 
மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். 
 
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள்  நீங்கும்.
 
பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை  மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
 
உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு  அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

No comments:

Post a Comment