medical-tips-to-cure-cough-and-sore-throat- அனைத்து வகையான கீரைகளின் சிறந்த பலன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 20 August 2021

medical-tips-to-cure-cough-and-sore-throat- அனைத்து வகையான கீரைகளின் சிறந்த பலன்கள் !!

அனைத்து வகையான கீரைகளின் சிறந்த பலன்கள் !!



நாம் அன்றாடம் பல வகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது.

அகத்திக் கீரை: பித்தம் தீரும்; வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை பெருக்கும்.
 
அரைக் கீரை: சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் நீக்கும். உடல் சூட்டை சமப்படுத்தும், ஆண்மை பலப்படும்.
 
சிறு கீரை: சிறுநீரகத்தில் உண்டாகும் நோய்கள், பித்தம், கண் மற்றும் காச நோய்களை குணப்படுத்தும்.
 
பசலைக் கீரை: கண் எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப் போக்கு, வாந்தியை போக்கும்.
 
பருப்பு கீரை: ரத்த சுத்திக்கு சிறந்தது; எல்லா வாத, சரும நோய்கள், மேக சிறுநீரக கோளாறுகளையும் நீக்கும்.
 
புளிச்ச கீரை: சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் விலகும். விந்து பலப்படும், மந்தம் விலகும், காச நோய் கட்டுப்படும், தேக பலம், அழகு கூடும்.
 
பொன்னாங்கண்ணிக் கீரை: இது, தங்க சத்துடையது. கண் மற்றும் மூலநோய், மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணி.
 
வெந்தயக் கீரை: இரும்புச் சத்து நிறைந்தது. நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணி. ஊளைச் சதை மற்றும் உடல் சூட்டை குறைக்கும்.


No comments:

Post a Comment