இருமல் மற்றும் தொண்டை வலியை குணமாக்கும் மருத்துவ குறிப்புகள் !!
வறட்டு இருமலை சில இயற்கை பொருட்கள் கொண்டு கட்டுப்படுத்த முடியும். திப்பிலியை பொடியாக்கி அதில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், சளி, வரட்டு இருமல் மற்றும் தொண்டை கமறல் குணமாகும்.
50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கலந்து விடவேண்டும். இதனை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
இளஞ்சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக போய்விடும். வறட்டு இருமலும் குறையும். இது இருமலுக்கு கைகொடுக்கும் வைத்தியம்.
10 கிராம் பொடி செய்த சீரகத்துடன் பொடி செய்த பனங்கற்கண்டை சேர்த்து இரண்டும் சம அளவில் கலந்து காலை,
மாலை என இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
தூதுவளை இலைகளை காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம். ஒரு ஸ்பூன் தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம். வறட்டு இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இருமல் விரைவில் குணமாகும்.
மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.
5 கிராம் சித்தரத்தை எடுத்துக்கொண்டு அதோடு உலர்ந்த திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்தால் இருமல் குணமாகும். ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டி டீஸ்பூன் தேன் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைத்து அருந்தவும். இதன் மூலம் இருமல், சளி சரியாகும்.
No comments:
Post a Comment