medical-tips-to-help-reduce-fat- கொழுப்பை குறைக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

medical-tips-to-help-reduce-fat- கொழுப்பை குறைக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!

கொழுப்பை குறைக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!


நெல்லிக்கனியை தண்ணீரில் கொதிக்க வைத்து, தினசரி காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். 
 
உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை மற்றும் பிஸ்தா போன்ற உலர்ந்த பழங்களை சாப்பிடுங்கள். ஏனெனில், இவற்றில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.
 
ஓட்ஸ் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துகள் உள்ளன, இவை உடலில் சேரும் கெட்டக் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. 
 
தேங்காய் எண்ணெய் கொழுப்பின் அளவைக் குறைக்க நன்மை பயக்கிறது. தோல் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கிறது. 
 
கொத்தமல்லி விதைகள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவையும் கொழுப்பின் அளவையும் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இந்த கலவையை கொதித்த பின் வடிகட்டி, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்ளுங்கள். இதன் சுவையை மேம்படுத்த பால், சர்க்கரை அல்லது ஏலக்காயை சேர்க்கலாம். 
 
வெங்காயத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. கொழுப்பின் அளவைக் குறைக்க இது ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக  கருதப்படுகிறது. இது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

No comments:

Post a Comment