health-benefits-of-corn- சோளத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 20 August 2021

health-benefits-of-corn- சோளத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் !!

Corn

சோளத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் !!


சோளத்தில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


இதில் கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்  மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் இருப்பதால் இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. 
 
பற்கள் தொடர்பான வியாதிகளை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் அதிகளவில் ஆபத்து ஏற்படக்கூடும். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் பற்கள் பலவீனமடைகின்றன, இதன் விளைவாக வலி உண்டாகிறது. பல்வலியை போக்க சோளம் உதவுகிறது. ஏனெனில், இதில் பற்களை வலுப்படுத்தும் பொட்டாசியம்  மற்றும் கால்சியம் உள்ளன. 
 
அஜீரணம் மலச்சிக்கல் பிரச்சினைக்க ு வழிவகுக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சோள ரோட்டியை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். இதில் நல்ல  அளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது,
 
சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தங்கள் உணவில் சோளத்தை உட்கொள்ள வேண்டும்.
 
கால்சியம் குறைபாடு பலவீனமான எலும்புகள் மற்றும் எலும்பு தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. சோளத்தை உட்கொள்வதன் மூலம், எலும்புகளை  பலப்படுத்த முடிகிறது. 
 
சோளத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது எழும்புகளை பலப்படுத்துகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் அச்சுறுத்தலை  தடுக்கிறது.

No comments:

Post a Comment