natural-medical-tips-to-help-correct-the-impact-of-psoriasis சோரியாசிஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

natural-medical-tips-to-help-correct-the-impact-of-psoriasis சோரியாசிஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

சோரியாசிஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!


தோல் சிவந்து தடித்துப்போய் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளி நிறத்தில் செதில் செதிலாக உதிரும். சிறிய வட்ட வடிவத்தில் தோன்றும். இந்த வட்ட  அமைப்பால், நமைச்சல் ஏற்பட்டு அரித்தல் சீழ் அல்லது இரத்தம் வரும்.

சோரியாசிஸ் புண்களில் அரிப்பும் நமைச்சலும் தோன்றலாம். வட்ட செதில் அமைப்பு இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். நீர்த்த எலுமிச்சம் பழச் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். 
 
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ் சாற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.
 
உலர்ந்த வேப்ப இலைகளை நன்றாக பொடி செய்து சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, ஒரு கோப்பை  தண்ணீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தி வரவும். இத்துடன் அரைத்த மஞ்சள் பொடியையும் சேர்த்து கலந்து அருந்தி வரலாம்.
 
புங்கத் தைலத்தினை வெளிப்பூச்சாக தடவி வர நல்ல பலன் கிடைக்கும். உணவு கொழுப்பு, மாமிச புரதம், சர்க்கரை இவற்றைக் குறைக்கவும். கடல் உப்புக்கு பதில் பாறை உப்பைப் பயன்படுத்தலாம். மது அருந்துதல் கூடாது.
 
தினமும் காலையில் 1 டம்ளர் தேன் அல்லது சர்க்கரை கலந்த தக்காளிச் சாறை அருந்தி வர இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தோல் வியாதிகள் அணுகாது. சிறிது நேரம் காலை வெயிலில் உடலில் படுவதால், சோரியாசிஸ் குறையும்.

No comments:

Post a Comment