medicinal-properties-of-thotta-sinungi-leaf(தொட்டால் சிணுங்கி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

medicinal-properties-of-thotta-sinungi-leaf(தொட்டால் சிணுங்கி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!)

தொட்டால் சிணுங்கி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!


தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்.

வயிற்று கடுப்பு குறைய: தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு  குறையும்.
 
சர்க்கரை நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
 
உடல் குளிர்ச்சியாக: தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும். சிறுநீர் எரிச்சல் குறைய: தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
 
வாத வீக்கம் குறைய: தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும். தேமல் குறைய: தொட்டாற்சுருங்கி  இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும்.
 
ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும். மூலச்சூடு குறைய: தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.

No comments:

Post a Comment