mullai-flower-has-medicinal-properties மருத்துவ குணங்களை கொண்டதா முல்லை பூ? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

mullai-flower-has-medicinal-properties மருத்துவ குணங்களை கொண்டதா முல்லை பூ?

Mullai flower

மருத்துவ குணங்களை கொண்டதா முல்லை பூ?

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.


முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பூ மட்டுமல்லாமல்,  அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.
 
முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும். முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை  குறைவு குணமாகும்.
 
முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும். ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி  பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
 
உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணிநேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.


No comments:

Post a Comment