the-nutrients-in-green-peas-and-its-amazing-benefits பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

the-nutrients-in-green-peas-and-its-amazing-benefits பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்...!!

பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்...!!


பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.


நுரையீரலுக்கும்  இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது. 

பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
 
இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இக்காயில் உள்ள விட்டமின் பி3(நியாசின்) தடைசெய்கிறது. இக்காயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிஜென்டுகள்  இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடைசெய்கிறது.
 
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து மிகுதியாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரிக்கும், இது அல்சைமர் நோயை தடுக்கும்.
 
பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை தொடர்ந்து  சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
 
பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே பச்சை பட்டாணி  சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம். 

No comments:

Post a Comment