காளானில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!
காளான் ரத்தத்தை சுத்தப்படுத்தும். புதிய ரத்த செல்கள் உருவாக காளான் என்னும் அறிய காய்கறி உதவுகிறது. காளானில் 80 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
மாவுச் சத்தும் இதில் குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோடியம் உப்பும், கொழுப்பும் குறைவாகவே உள்ளன.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் தினமும் காளான் சூப் சாப்பிட்டு வந்தால் நல்லது.
குறிப்பாக ஆண்களுக்கு புராஸ்சுடேட் புற்றுநோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து தப்பிக்க வாரம் 3 முறை உணவில் காளான் சேர்த்துக் கொள்ளலாம்.
காளான்களில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதிலுள்ள மைக்ரோஃபேஜ்கள் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க
உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காளான்கள் சாப்பிடலாம். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் பிற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வல்லது.
மேலும் வைட்டமின் டி, செலினியம், ஆன்டி ஆக்ஸிடன்கள், தாமிரம் ஆகியவை முடி உதிர்தலை தடுத்து அவை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் வீக்கம், குடற்புழுக்களை தடுக்கிறது.
காளானில் உள்ள வைட்டமின் பி1 நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. வைட்டமின் பி2 கண்களின் ஆரோக்கியத்திற்கும், வைட்டமின் பி3 செரிமானம் நடைபெறவும், வைட்டமின் பி5 ஹார்மோன்கள் உற்பத்தியிலும், வைட்டமின் பி6
மனச்சோர்வை நீக்குவதிலும் பங்களிக்கிறது.
காளானில் உள்ள ஹைலூரானிக் அமிலம் சருமங்களில் ஈரப்பதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
No comments:
Post a Comment