orange benefits புத்துணர்வான மிளிரும் சருமத்தை பெற உதவும் ஆரஞ்சுத்தோல் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

orange benefits புத்துணர்வான மிளிரும் சருமத்தை பெற உதவும் ஆரஞ்சுத்தோல் !!

புத்துணர்வான மிளிரும் சருமத்தை பெற உதவும் ஆரஞ்சுத்தோல் !!


ஆரஞ்சுத் தோலும் பாதாமும் உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி உங்களுக்கு புத்துணர்வான மிளிரும் சருமத்தையும் தர உதவும். 
 

ஒரு ஆரஞ்சுப் பழத்தை உறித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். ப்ளெண்டரில் இரண்டையும் போட்டு ரவை போன்ற பக்குவத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். 
 
இதை தினமும் சிறிதளவு பாலுடன் சேர்த்து பூசி வந்தால் அப்பழுக்கற்ற சருமம் பெற முடியும். தேவைப் பட்டால் இந்த கலவையைக் கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் மசாஜும் செய்யலாம்.
 
ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி எக்ஸ்போலியேட் செய்கிறது. ஆரஞ்சுத் தோலைக் கொஞ்சம் எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கப் தயிரில் கலந்து உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
 
இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை தூய்மையாகவும், ஈரப்பதத்துடனும் புத்துணர்வுடனும் வைக்க உதவுகிறது. சருமத்தை வெண்மையாக்கவும் இது ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் ஆரஞ்சுத் தோலில் செய்யக்கூடிய பல்வேறு பராமரிப்பு முறைகளில் சிறந்தது இதுவே. முகத்தில் உள்ள பெரிய பள்ளங்கள் மற்றும் பருக்களை போக்கவும் இது உதவுகிறது. இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரையும் பால் அல்லது பால் கீரீமையும் கலந்துகொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்கள் முகத்தில் பரவலாக மசாஜ் செய்யவும். இதை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
 
ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவ ை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் நாசூக்கான, எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலன் பெற முடியும். ஆரஞ்சு தோல் பவுடர் கொஞ்சம் எடுத்து அதை வேப்ப இலை பவுடருடன் சேர்த்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து முகத்தில் தேய்த்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment