new-restrictions-from-today-in-tamil-nadu இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் செயல்படுப்படும் ஊரடங்கு விதிமுறைகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday 31 August 2021

new-restrictions-from-today-in-tamil-nadu இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் செயல்படுப்படும் ஊரடங்கு விதிமுறைகள்

inner 4

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் செயல்படுப்படும் ஊரடங்கு விதிமுறைகள்

இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது
 
அத்தியாவசிய பணிகளான, பால் விநியோகம், நாளிதழ்கள் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள், இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்
 
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் செயல்படும். ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது. இதை கடைப்பிடிக்காதவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. கல்லுாரி மற்றும் பல்கலை ஆசிரியர்கள், தங்கள் வீட்டிலேயே, இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில், 100 பேருக்கு மிகாமல்; இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கவும், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்தவும், எந்த தடையும் இல்லை.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை, 6:00 முதல், 10:00 மணி வரை; பகல், 12:00 முதல், மாலை, 3:00 மணி வரை; மாலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படும். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற, அனைத்து சுற்றுலா தலங்களுக்குபயணியர் செல்ல, அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment