potato-face-pack-to-add-facial-beauty- முக அழகை கூட்டும் உருளைக்கிழங்கு பேஸ்பேக்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

potato-face-pack-to-add-facial-beauty- முக அழகை கூட்டும் உருளைக்கிழங்கு பேஸ்பேக்...!!

Potato Face Pack

முக அழகை கூட்டும் உருளைக்கிழங்கு பேஸ்பேக்...!!


தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3, பால் - 2 ஸ்பூன், ஓட்ஸ் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
 
30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.
 
உருளைக்கிழங்கு சருமத்தில் உள்ள சேதங்களைப் போக்கி, திட்டுகளைச் சரி செய்கிறது. எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை, முகத்தில்  உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது. 
 
தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. எலுமிச்சை சாற்றை நேரடியாக அப்படியே தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால், சிறிதளவு தண்ணீர் கலந்து  பயன்படுத்தவும்.
 
உருளைக் கிழங்கில் ப்ரோ வைட்டமின் ஏ மற்றும் பீனோலிக் கூறுகள் உள்ளன. இவை வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுபவையாகும். இதனால் சருமம் பொலிவாக ஆரோக்கியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment