what-are-the-benefits-of-taking-a-bath-with-crystal-salt கல் உப்பு சேர்த்து குளிப்பதால் என்ன பயன்கள்...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

what-are-the-benefits-of-taking-a-bath-with-crystal-salt கல் உப்பு சேர்த்து குளிப்பதால் என்ன பயன்கள்...?

crystal Salt

கல் உப்பு சேர்த்து குளிப்பதால் என்ன பயன்கள்...?


நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. 

சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு. ஆனால் குளியலுக்கு  பயன்படுத்தும் உப்பானது எந்த கலப்படமுமின்றி நேரடியாக ஆவியாதலிலிருந்து பெறப்படுகிறது. ஆவியாதல் மூலம் நேரடியாகப் பெறப்படும் இந்த உப்பில் விட்டமின் தாதுப்பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.
 
இந்த கடல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளது. இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரின் அளவுக்கு  ஏற்ப நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்கலாம். 
 
சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். குறைந்தது இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவேண்டும். நீங்கள் குளிக்கும் இந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து இரண்டு டிகிரி அதிகமான வெப்பநிலையில் இருக்க வேண்டும்.
 
இப்படி நீங்கள் குளிக்கும் போது ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். அதோடு இரத்த ஓட்டம் சீராவதால் சருமம் பொலிவாக மாறும். தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும்.
 
இந்த கடல் உப்பு குளியல் சிலருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதாவது பிரச்சனை வந்தால் தவிர்த்து விடுங்கள். அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு, தேமல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த குளியலை நீங்கள் செய்யும்  முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.


No comments:

Post a Comment